ஆரையம்பதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளர்கள்! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவிலான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் நேற்று(11) காலை பாரிய அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு பேரணியானது, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் டிலக்சன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் வழிகாட்டலின் கீழ் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்றது.
தொழுநோயாளர்களின் எண்ணிக்கை
இப்பிரதேசத்தில் இவ்வருடம் 20 தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
மேலும், இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த விழிப்புணர்வு பேரணி இடம் பெற்றதுடன் தொழுநோய் தொடர்பாக பொதுமக்களை விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலைய பணிப்பாளர் வைத்தியர் தர்ஷினி சாந்தரூபன் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










