வீதிகளில் எச்சில் உமிழ்ந்தால் சட்ட நடவடிக்கை
இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அநுர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வீதிகளில் குப்பைகளை போடுதல் மற்றும் எச்சில் உமிழ்தல் போன்றவற்றுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சுத்தமான இலங்கை நாடு
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையைச் சுத்தமானதொரு நாடாக மாற்றுவதற்கு வீதிகளில் குப்பைகளை வீசுதல், வெற்றிலை எச்சிலை உமிழ்தல் போன்ற செயற்பாடுகளை மக்கள் தவிர்ப்பதுடன், அதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே, இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்குக் கடுமையான புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் ”என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |