எரிவாயு தட்டுப்பாடு : ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka LAUGFS Gas PLC President of Sri lanka
By Rakshana MA Nov 24, 2024 04:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணித்துள்ளார்.

சமையல் எரிவாயு வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான Laughfs Gas நிறுவனத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிழக்கில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறப்பு!

கிழக்கில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறப்பு!

மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விற்பனை

மேலும் அவ்வர்த்தமானியில், சமையல் எரிவாயு வழங்குநர் குறைந்தபட்சம் 7,500 மெட்ரிக் டன் எல்பி எரிவாயு இருப்பை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எரிவாயு தட்டுப்பாடு : ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! | President S New Orders To Gas Shortage

உள்நாட்டு சந்தைக்கு LP எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய இது அவசியமானது. இந்தநிலையில், 9,000 மெற்றிக் டன் எரிவாயுவை Laugfs Gas PLC நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விற்பனைக்கு அனுமதிக்கவேண்டும்.

இது கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 21 வரை நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா

நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் : அநுர குமார திசாநாயக்க

நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் : அநுர குமார திசாநாயக்க

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW