அஷ்ரப்பின் இல்லம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

Srilanka Muslim Congress Mohammad Ashraf Ghani South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA May 20, 2025 07:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது குடும்பத்தினரால், நேற்று(19) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து உப்புடன் வரும் கப்பல்

இந்தியாவிலிருந்து உப்புடன் வரும் கப்பல்

 உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இதற்காக முயற்சித்த அனைவருக்கும் குறிப்பாக தலைவரின் குடும்பத்திற்கும் நன்றியினைத் தெரிவிப்பதோடு மறைந்த தலைவர் அஷ்ரஃப் இற்கும் பிரார்த்திப்பதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

அஷ்ரப்பின் இல்லம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு | Late Ashraf S House

மேலும், இந்த உத்தியோகபூர்வமாக இக்கையளிக்கும் நிகழ்வில் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் யூ.எல்.அப்துல் மஜீத் உட்பட மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் புதல்வர் அமான் அஷ்ரப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறையில் மாணவர்களை கடுமையாகத் தாக்கிய பௌத்தகுரு

அம்பாறையில் மாணவர்களை கடுமையாகத் தாக்கிய பௌத்தகுரு

தங்க விலையில் வீழ்ச்சி! வாங்கவுள்ளோருக்க வெளியான அறிவிப்பு

தங்க விலையில் வீழ்ச்சி! வாங்கவுள்ளோருக்க வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW       


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery