கடன் சுமையுடன் கிண்ணியா பிரதேச சபை! புதிய தவிசாளரின் நிலை..
கிண்ணியா (Kinniya) நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவானது கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது.
கழிவகற்றல், மின் குமிழ்களை பழுது பார்த்தல், கான்களை துப்பரவு செய்தல் போன்ற பிரதான பணிகள் கிண்ணியா நகர சபையில் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடன் சுமை
தற்போது சுமார் 38 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கடன் சுமையோடு தான் புதிய தவிசாளர் எம.எம்.மஹ்தின் தலைமையிலான புதிய சபை பொறுப்புகளை சுமந்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நகர சபையின் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கிண்ணியா நகர சபைக்கு இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணம் என்ன? யாரால் இந்நிலை ஏற்பட்டது? என மக்கள் அறிந்து கொள்ள எதிர்பார்ப்பாத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |