காத்தான்குடி மாணவியின் புது முயற்சி
போதைப்பொருள் மற்றும் சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்துதை கண்டித்து காத்தான்குடியிலிருந்து கொழும்பு வரையான துவிச்சக்கர வண்டி பயணத்தை மாணவி ஒருவர் ஆரம்பித்துள்ளார்.
குறித்த துவிச்சக்கர வண்டி பயணமானது இன்று (07) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா என்ற மாணவியே தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டி பயணம்
போதைபொருள் மற்றும் சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை போதைவஸ்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும் இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த மாணவியுடன் அவரின் தாய் மற்றும் உறவினர்கள் சிலரும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
இன்று ஆரம்பிக்கப்பட்ட பயணமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பில் முடிவடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடு்த்து, எதிர்வரும் திங்கட்கிழமை(14) குறித்த மாணவி ஜனாதிபதி அனுரகுமாரவிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |