இடைநிறுத்தப்பட்ட காங்கேசன்துறை கப்பல் சேவை

Sri Lanka Tourism Sri Lanka Government Of India India Climate Change
By Rakshana MA Nov 11, 2024 01:02 PM GMT
Rakshana MA

Rakshana MA

சீரற்ற வானிலை காரணமாக நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை – இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் தொடரும் அரிசிக்கான தட்டுப்பாடு!

சந்தையில் தொடரும் அரிசிக்கான தட்டுப்பாடு!

சீரற்ற வானிலையினால் கப்பல் இடைநிறுத்தம்

மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை(08) முதல் ஞாயிற்றுக்கிழமை (10) வரையிலும் மழையுடனான வானிலையினால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை.

இடைநிறுத்தப்பட்ட காங்கேசன்துறை கப்பல் சேவை | Kangesanthurai Shipping Service Halted November

நாளை(12) கப்பல் சேவை வானிலை சார்ந்தே தீர்மானிக்கபடும். எனவே நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முதல் எவ்வித பதிவுகளும் மேற்கொள்ளவில்லை.

சீரற்ற வானிலையினால் தற்காலிகமாக கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், கிட்டத்தட்ட 150 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வானிலையுடனான கடல் பயணத்திட்டம்

கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசை முன்னறிவிப்புகள் கப்பல் பயணங்களைத் திட்டமிட உதவி புரிகின்றன. பயணிகளை ஏற்றிச் செல்வது பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிக்க, இலங்கை மற்றும் இந்திய வானிலை முன்னறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுவதாக  நிரஞ்சன் நந்தகோபன் கருத்து தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட காங்கேசன்துறை கப்பல் சேவை | Kangesanthurai Shipping Service Halted November

மேலும், வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வடக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW