கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்! எடுக்கப்பட்ட தீர்மானம்

Ampara Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Feb 08, 2025 07:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸவுடன் கல்முனை சமூக செயற்பாட்டாளர் ஏ.எம்.நஸீர் ஹாஜி முக்கிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பு வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனையில் ஊறிப்போயுள்ள இனவாதம், பிரதேசவாதம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக விடயமாக கலந்து பேசிய பின் அதுவிடயமாக ஒரு அறிக்கையையும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவிடம் நஸீர் ஹாஜி சமர்ப்பித்துள்ளார்.

காசா போர்நிறுத்தம்! முறிந்து போகும் ஆபத்தில்..

காசா போர்நிறுத்தம்! முறிந்து போகும் ஆபத்தில்..

பிரச்சினைகளுக்கான தீர்வு 

மேலும், இது தொடர்பில் நஸீர் ஹாஜி தெரிவிக்கையில்,

கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினை என்பது ஹலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் தேர்தல்கால உண்டியல். அதை பிச்சைக்காரன் புண்ணாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்! எடுக்கப்பட்ட தீர்மானம் | Kalmunai Sub Ds Office Matters Decisions

முன்பு நாடாளுமன்றில் கோடீஸ்வரன் எம்.பி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச.எம்.எம்.ஹரீஸ், ஆகியோர் இரு கை ஓசையாக மக்களை உசுப்பேத்தினார்கள. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டும் ஒரு கையால் ஓசையின்றி கோசமிடுகின்றார்.

ஆதலால் அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் இதன்போது அவர் பிரதி அமைச்சரை கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், இவரது இந்தக் கோரிக்கை பிரதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையைப் பற்றிய எலோன் மஸ்க்கின் வெளியிட்ட தகவல்

இலங்கையைப் பற்றிய எலோன் மஸ்க்கின் வெளியிட்ட தகவல்

வீழ்ச்சியடைந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!

வீழ்ச்சியடைந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW