கல்முனை வீதியில் பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு
கல்முனையில் 2025 ஆம் ஆண்டு தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று (09) 'வீதி பாதுகாப்பு தினம்' எனும் கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய, பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாட் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் இணைந்து விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது.
விழிப்புணர்வு நிகழ்வு
அதன்படி, அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள், வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள், வாகன ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுனர்கள் என்பவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |















