கல்முனையில் சுகாதார துறை முன்னேற்ற முயற்சி!

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Kalmunai Local government Election
By Rakshana MA Jul 14, 2025 07:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீன் நேற்று (12) சந்தித்து கலந்துரையாடினார்.

ஆடை ஏற்றுமதியில் இலங்கை பெற்ற வருமானம் குறித்து அதிர்ச்சி தகவல்

ஆடை ஏற்றுமதியில் இலங்கை பெற்ற வருமானம் குறித்து அதிர்ச்சி தகவல்

முன்னேற்ற பயிற்சி 

பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிரின் நெறிப்படுத்தலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனையில் சுகாதார துறை முன்னேற்ற முயற்சி! | Kalmunai Health Talks With Lg Heads

இதன்போது திண்மக் கழிவகற்றல், டெங்கு ஒழிப்பு, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட வைத்தியசாலைகளின் வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.  

அத்துடன், பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், நிந்தவூர், நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.

கட்டார் மீது ஈரான் தாக்குதல்...வெளியான ஆதாரங்கள்

கட்டார் மீது ஈரான் தாக்குதல்...வெளியான ஆதாரங்கள்

ஏறாவூரில் கோர விபத்து..! உயிர் தப்பிய சாரதி

ஏறாவூரில் கோர விபத்து..! உயிர் தப்பிய சாரதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW