கல்முனையில் கடலரிப்பு அனர்த்தம்
கல்முனை (Kalmunai) கடற்கரைப் பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை திட்டத்தில் அசமந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை, முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது.
இதையடுத்து, நேற்று(12) பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி, திகாமடுல்ல மாவட்ட எம்.பி.மஞ்சுள ரத்னாயக்க மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் துளசிதாசன் ஆகியோர், கடற்கரைப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து நிலைமையை ஆய்வு செய்தனர்.
கடலரிப்பு அனர்த்தம்
இதன்போது அசமந்தமாக செயற்பட்டிருந்த சம்பந்தப்பட்ட கொந்தராத்துகாரர் பணிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொறியியலாளர் தெரிவித்தார்.
மேலும், காலத்தை வீணாக்காமல் மாற்று வழிமுறைகள் மூலம் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவை வழங்கினர்.
இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டு, கடலரிப்பு அபாயத்தின் தற்போதைய களநிலவரங்களை விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






