கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் அலங்கரிப்பிற்கு முன்னாள் எம்.பி நிதி உதவி
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்றலில் அமைக்கப்பட்ட மின் விளக்கு அலங்கரிப்பு வேலைத்திட்டத்திற்கு திகாமடுல்ல மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸினால் டி- 100 திட்டத்தின் கீழ் 6.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடற்றொழிலாளர் ஓய்வு அறை கட்டிடத்திற்காக 03 மில்லியன் நிதி ஒதுக்கீடு மற்றும் வீதி கொங்கிறீட் இடும் வேலைத்திட்டத்திற்கு 7.5 மில்லியன் நிதியும் என மொத்தம் 17 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
மேற்படி வேலைத்திட்டங்கள் பூரணமாக நிறைவு செய்யப்பட்டு அவற்றை திறந்து வைத்து மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், கல்முனை மாநகர பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜெ. ஜெளஸி, கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் தலைவர் அல்ஹாஜ் எஸ். எம். ஐ அப்துல் அஸீஸ், செயலாளர் முபாரிஸ் எம் ஹனீபா, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடற்கரைப் பள்ளிவாசல் முன்னாள் இன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கோரிக்கைக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |