கிழக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் - பஹ்ரியா மாணவர்கள் சாதனை

Batticaloa Eastern Province Kalmunai Sri Lankan Schools
By Laksi Sep 12, 2024 09:37 AM GMT
Laksi

Laksi

கல்முனை கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் நடந்து முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு டையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 5 தங்கம், 5 வெள்ளி பதக்கம் பெற்று மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

இதில் 3 போட்டியில் மாகாணம ட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளதுடன் ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாடசாலை மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

வரலாற்று சாதனை

இந்த வெற்றிக்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனை, வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஏ.ஸலாம் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், மாணவர்களை வழிநடத்தி பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் யூ.எல். ஷிபான் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம். ரியால், ஏ.டபலியு. எம். ஆசாத் கான் ஆகியோருக்கும் போட்டியில் பங்கேற்று தனது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

கிழக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் - பஹ்ரியா மாணவர்கள் சாதனை | Kalmunai Al Bahria Students Historical Achievement

மேலும், போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்!

ஆசியாவின் வளர்ந்த நாடாக 10 ஆண்டுகளில் இலங்கை : நாமல் பகிரங்கம்

ஆசியாவின் வளர்ந்த நாடாக 10 ஆண்டுகளில் இலங்கை : நாமல் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW