கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இப்தார் வைபகம்
By Rakshana MA
கல்முனையில் வருடாந்த இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை கமு/கமு/ அல்- அஸ்கர் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் (14) நடைபெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வு
இந்நிகழ்வின் விசேட ரமழான் சிந்தனையையும், மார்க்க சொற்பொழிவையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்முனை கிளைத்தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.முர்ஷித் முப்தி நிகழ்த்தியுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பொறியியலாளர் எந்திரி ஜௌஸி அப்துல் ஜப்பார், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் செயலாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ரோஷன் அக்தர் உள்ளிட்ட பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






