சூட்சுமமான முறையில் காரைதீவில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்!

Sri Lanka Police Eastern Province Crime Kalmunai
By Rakshana MA Mar 05, 2025 09:53 AM GMT
Rakshana MA

Rakshana MA

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் நேற்று(04) இரவு சூட்சுமமான முறையில் ஜன்னல் கழற்றப்பட்டு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக இன்று(05) காரைதீவு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உச்சம் தொடும் தங்க விலை! புதிய விலை நிலவரம் வெளியாகின

உச்சம் தொடும் தங்க விலை! புதிய விலை நிலவரம் வெளியாகின

ஆரம்ப கட்ட விசாரணை 

தற்போது ரமழான் நோன்பு காலம் என்பதால் வீட்டின் உரிமையாளர்கள் இரவு வணக்க வழிபாட்டிற்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு சென்று, இரவு 12 மணியளவில் உறங்கிய வேளை குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சூட்சுமமான முறையில் காரைதீவில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்! | Jewelry And Money Stolen Robbed At Karaitivu

இந்நிலையில், அதிகாலை வேளை குறித்த வீட்டின் உரிமையாளர் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி மற்றும் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டதை அவதானித்து பின்னர் வீட்டை சோதனை செய்த போதே தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜெகத் வழிகாட்டுதலில் காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சூட்சுமமான முறையில் காரைதீவில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்! | Jewelry And Money Stolen Robbed At Karaitivu

மேலும் மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படமாகவுள்ள மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு ! நாமல் வெளியிட்ட தகவல்

திரைப்படமாகவுள்ள மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு ! நாமல் வெளியிட்ட தகவல்

கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு நடவடிக்கை

கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு நடவடிக்கை

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery