மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு ஜப்பான் கொடுத்துள்ள வாக்குறுதி

Human Rights Commission Of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Japan World
By Rakshana MA Mar 04, 2025 06:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், நேற்று(03) ஜப்பான் பிரதிநிதி ஒருவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையின் புதிய அரசாங்கம், தேசிய நல்லிணக்கத்தை நோக்கி எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கத்தக்கது.

வெளிநாட்டு வேலையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம்

வெளிநாட்டு வேலையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம்

தொடர்ந்து ஆதரவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு பொறிமுறையில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கக்கூடியதாக உள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு ஜப்பான் கொடுத்துள்ள வாக்குறுதி | Japan Stands With Sri Lanka On Human Rights Issues

இந்தநிலையில், மனித உரிமைகள் நிலைமையை, உறுதியான முறையில் மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்துக்கு பங்களிக்கும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதற்கும், இலங்கை மேற்கொள்ளும் சொந்த முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் அசமந்த நிலையிலேயே கிழக்கு மாகாண சபை பயணிக்கிறது - இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

இன்னும் அசமந்த நிலையிலேயே கிழக்கு மாகாண சபை பயணிக்கிறது - இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

இலங்கையில் தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

இலங்கையில் தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW