ஜனாஸா எரிப்பு விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

COVID-19 Ranil Wickremesinghe Jeevan Thondaman
By Laksi Jul 27, 2024 12:51 PM GMT
Laksi

Laksi

ஜனாஸா எரிப்பை விசாரிக்க ஆணைக்குழு நிறுவ வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ள பதிலில் திருப்தியில்லை என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், பூகோள அரசியல் சதிக்காக உடல்களை தகனம் செய்ய முடியும் என்ற முடிவை ஒரு சிறு குழுவினர் எடுத்தார்கள் என்றால் அவர்களின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத சக்தி இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது நாட்டுக்கு நல்லது.

ஏனெனில் நாடளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு சிந்தனை கொண்டவர்கள் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக நின்ற போது அதே அரசாங்கத்தின் மற்றுமொரு தரப்பு எதிர்த்தாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை சாதாரணமாக கடந்து செல்லவோ அல்லாதது நிராகரிக்கவோ முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமா..! திங்கட்கிழமை வெளியாகவுள்ள முடிவு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமா..! திங்கட்கிழமை வெளியாகவுள்ள முடிவு

முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம்

அத்துடன், பேராசிரியர் மெத்திகாவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கவும் முடியாது.

ஜனாஸா எரிப்பு விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Janaaza Burning Muslim Demand

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அமைச்சின் ஊடாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் கோவிட் வைரஸ் நீரினால் பரவுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த குழுவின் அறிக்கைக்கு சிங்கள தேசியவாத முகாமை பிரதிநிதித்துவப்படுத்திய மெதகொட அபயதிஸ்ஸ தேரர், கலகொட அத்தே ஞனசார தேரர், விமல் மற்றும் கம்மன்பில எம்.பி.க்கள் ஆதரவாக இருந்தால், பேராசிரியர் மேத்திகா பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஏன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதை எதிர்த்தது?

முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமை இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைத்தது என்பதையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட நியமனங்கள்

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட நியமனங்கள்

கோரிக்கை

இதுவரை பல்வேறு தரப்பினராலும் வெளியான கருத்துகள் அனைத்தும் உண்மைகளையே உணர்த்துகின்றன. இந்த அநியாயம் முஸ்லிம் சமூகத்தின் இதயங்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் பரப்பக்கூடிய ஒரு கருத்தியல் ஆயுதமாக அரசியல் மேடையில் இந்த விடயம் உள்ளது.

ஜனாஸா எரிப்பு விவகாரம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Janaaza Burning Muslim Demand

இவற்றை கவனத்தில் கொண்டு கோவிட் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக (23/06/2024) அன்று நான் எழுதிய உருக்கமான இரண்டு பக்க கடிதத்தில் என்னைக் சாதாரண குடிமகன் போன்று கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டபிள்யூ.எம். பாத்தியா விஜயந்த ஜனாதிபதி செயலாளருக்குப் பதிலாக என ஒப்பமிட்டு அனுப்பிய மூன்று வார்த்தைகள் கொண்ட பதில் கடிதம் எனக்கோ அல்லது முஸ்லிம் சமூகத்திற்கோ திருப்தியானதாக இல்லை.

ஏனென்றால், "கோவிட்டால் இறந்த உடல்களை தகனம் செய்வது குறித்து" என்ற வார்த்தை கூட இல்லாமல் "கருத்துகள் மற்றும் பரிந்துரைகள்" என்று மட்டுமே கடிதம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

இந்த பதில் கடிதத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளபடி, அதாவது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நான் வைக்கும் "நம்பிக்கை" அப்படியே உள்ளது.

எனவே, கோவிட் சடலங்களை தகனம் செய்தமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நிறுவ மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வங்கி மோசடிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கி மோசடிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW