தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட நியமனங்கள்

Sri Lanka Police Election Commission of Sri Lanka Election
By Mayuri Jul 27, 2024 11:40 AM GMT

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசரங்க கரவிடவுக்கு மேலதிகமாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விபரம்

அதன்படி பிரதி பொலிஸ்மா அதிபர் பீ.லியனகே மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கே.டீ.ஜீ.எல்.ஏ தர்மசேன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட நியமனங்கள் | Special Police Unit For Elections

தற்போது பொலிஸ் தலைமையகத்தில் தேர்தல் விவகாரங்களுக்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த பிரிவுக்கு பொறுப்பதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW