இஸ்ரேலின் விதிமீறல் : காஸாவில் போர் நிறுத்தம் கேள்விக்குறி?

Israel Palestine World Israel-Hamas War Gaza
By Rakshana MA Feb 12, 2025 09:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் (Israel) மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக்கைதிகள் விடுவிப்பை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் (Hamas) படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, எதிரி படைகளின் விதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் கண்காணித்து வருகிறது.

வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்  என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

பணயக்கைதிகள்..

ஆனால், ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது. அதன்படி, வரும் எதிர்வரும் சனிக்கிழமை (15.02.2025) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இஸ்ரேலின் விதிமீறல் : காஸாவில் போர் நிறுத்தம் கேள்விக்குறி? | Israel Violates War Treaty

ஏறத்தாழ 15 மாத போரைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஜனவரி மாத இறுதியில் 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பரஸ்பரம் இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காசாவில் உள்ள இஸ்ரேலியப் படையினரை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை மாற்றம்! அரசாங்கத்தின் நிலைப்பாடு

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை மாற்றம்! அரசாங்கத்தின் நிலைப்பாடு

போர் நிறுத்தம்

17 இஸ்ரேலிய பணயக்கைதிகள் போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் இன்னும் விடுவிக்கப்பட உள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறுவதுடன் அவர்களில் எட்டு பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் விதிமீறல் : காஸாவில் போர் நிறுத்தம் கேள்விக்குறி? | Israel Violates War Treaty

இதுவரை விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளுக்கு பதிலாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிரதி அமைச்சர்

குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிரதி அமைச்சர்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW