காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு
காசாவில்(Gaza) 15 மாதங்களாக போரில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்(Israel) ஹமாஸ்(Hamas) போர் முடிவுக்கு வந்துள்ளதாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி அறிவித்துள்ளார்.
காசாவில் நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கத்தார் கூட்டு முயற்சியில் பல மாதங்களாக அவ்வப்போது நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது..
போர் நிறுத்தம்
இதன்படி, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஜனவரி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப்(Donald Trump) எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.
இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கையில், தான் ஜனாதிபதி பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
தேர்தலில் வெற்றி
அதற்கு முன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்த நிலையில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் முயற்சி செய்து வந்தன.
இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், பலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன் இதன் மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |