காசாவில் பேரழிவை ஏற்படுத்தும் பசி: ஐ. நா வின் எச்சரிக்கை
காசாவில் பசி நெருக்கடியானது பேரழிவை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் மனிதாபிமான விநியோகங்களைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச உதவிக் குழுக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
மேலும், காசா பகுதிகளுக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அங்கு வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனவும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
பேரழிவை தரக்கூடிய நிலைமை
இந்த நிலையில், பலஸ்தீனப் பகுதிக்குள் செல்வதற்கு இரண்டு வழிகள் மாத்திரமே திறக்கப்படுவதால், உதவிக் குழுக்களின் நாளாந்த இலக்கை அடையமுடியாத நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நிலைமை பேரழிவைத் தரக்கூடியதாகவே உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், காசாவில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மொத்த சனத்தொகையில் கால்வாசியினர் பட்டினியால் வாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |