பிரமிக்க வைக்கும் இஸ்மாயில் ஹனியாவின் ஆடம்பர வாழ்க்கை : வெளியான தகவல்

Iran Israel-Hamas War Iran-Israel Cold War
By Shalini Balachandran Aug 01, 2024 10:20 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா பெரும் செல்வந்தராகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன்படி ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற பிரமாண்ட பங்களா, 25க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள், தனி ஜெட் விமானம் என்பன இவரிடம் இருந்துள்ளன.

இவரின் சொத்து மதிப்பு மட்டும் இலங்கை மதிப்பில் ரூ. 12,09,61 கோடிஎன தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பொருளாதாரம் மீது முழுமையான கட்டுப்பாடு

இஸ்மாயில் ஹனியா காசாவிலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்தாலும், அதன் பொருளாதாரம் மீது தனது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருந்தார்.

காசாவில் இருந்து எகிப்து வரையிலான சுரங்கப்பாதை மூலம் அதிக பணம் சம்பாதித்து வந்தார். இந்த சுரங்கப்பாதை வழியாகத்தான் எகிப்திய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

பிரமிக்க வைக்கும் இஸ்மாயில் ஹனியாவின் ஆடம்பர வாழ்க்கை : வெளியான தகவல் | Ismail Haniya Lived In Luxury

இஸ்மாயில் ஹனியா இந்த சுரங்கப்பாதையின் பயன்பாட்டிற்காக பெரும் வரிகளை விதித்தார்.

2014-இல் வெளியிடப்பட்ட இஸ்ரேலிய அறிக்கையின்படி, இஸ்மாயில் ஹனியா மற்றும் ஹமாஸ் தலைவர்கள் சுரங்கப்பாதை வழியாக நடத்தப்படும் வர்த்தகத்திற்கு 20 சதவீதம் வரை வரி விதித்தனர்.

இந்த சுரங்கப்பாதை வியாபாரத்தின் மூலம்தான் 1,700 ஹமாஸ் தலைவர்களும் அதிகாரிகளும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது

இலங்கையில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW