வேலை நிறுத்தத்தம் தொடர்பில் சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் எடுத்துள்ள தீர்மானம்

Government Employee Sri Lankan Peoples Strike Sri Lanka Office of Public Health Budget 2025
By Rakshana MA Mar 18, 2025 06:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று(18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ரணிலின் கைது தொடர்பில் கம்மன்பில வெளியிட்ட தகவல்

ரணிலின் கைது தொடர்பில் கம்மன்பில வெளியிட்ட தகவல்

வழங்கப்படும் ஆதரவு

இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

வேலை நிறுத்தத்தம் தொடர்பில் சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் எடுத்துள்ள தீர்மானம் | Island Wide Health Sector Strike 2025

இதேவேளை நிதியமைச்சின் அதிகாரிகளுடன் தமது பிரச்சினை தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பிற்பகல் வேளையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பிற்பகல் வேளையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் 103 வயது வரை தெளிவான சிந்தனையுடன் வாழ்ந்த வயோதிபர்

இலங்கையில் 103 வயது வரை தெளிவான சிந்தனையுடன் வாழ்ந்த வயோதிபர்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW