ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் ஈராக்கில் படுகொலை : உறுதி செய்த ட்ரம்ப்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு கதீஜா ஈராக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதி செய்துள்ளார்.
ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் கருத்து வெளியிடும் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் இனால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபு கதீஜா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
துணிச்சலான வீரர்கள்
நம்முடைய துணிச்சலான போர் வீரர்கள் தயக்கமின்றி அவரை வேட்டையாடி உள்ளனர்.
இதனுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் கொல்லப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த நடவடிக்கை
மேலும், அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக் மற்றும் குர்திஷ் படைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அபு கொல்லப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அப்துல்லா மகி முஸ்லே அல்-ரிபாய் என்ற அபு கதீஜா படுகொலை செய்யப்பட்ட பிற விபரங்களை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியும் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், ஈராக் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆபத்து நிறைந்த பயங்கரவாதிகளில் முக்கிய நபராக அபு உள்ளார் எனவும், அமைப்பில் உத்தரவிட கூடிய முக்கிய பதவியில் அவர் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், அபு கொல்லப்பட்டது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |