கிழக்கில் மாணவர்களின் மரணத்திற்கு காரணம் முப்படையினரின் பொறுப்பற்ற செயலாகும் : ரவூப் ஹக்கீம்

Sri Lanka Climate Change Eastern Province Weather Floods In Sri Lanka
By Rakshana MA Nov 30, 2024 11:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாணத்தில் அரபுக் கல்லூரி மாணவர்களின் இறப்பிற்கு காரணம் முப்படையினரின் பொறுப்பற்ற செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakkeem) தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக நேற்று(29) கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன்போது, சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த பாதிப்புகள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

காலநிலை சீராகியும் ஆபத்திலுள்ள வடமாகாணம்!

காலநிலை சீராகியும் ஆபத்திலுள்ள வடமாகாணம்!

முப்படையின் கவனக்குறைபாடு

தொடர்ந்தும் இது தொடர்பில் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாவது,

மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் (tractor) கவிழ்ந்து விபத்துச் சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியிருந்தது.

இதில் அரபுக் கல்லூரி மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயரிழந்தனர். இந்த துயர சம்பவமானது முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்துள்ளது.

கிழக்கில் மாணவர்களின் மரணத்திற்கு காரணம் முப்படையினரின் பொறுப்பற்ற செயலாகும் : ரவூப் ஹக்கீம் | Irresponsible Acts Cause Student Deaths In Eastern

மேலும் குறித்த பாலத்திற்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்திருந்த நிலையில் பாதையை மூடாமல் போக்குவரத்துக்கு அனுமதியளித்தமையானது பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடாகும்.

இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள் : கிளிநொச்சியில் வடிந்தோடும் வெள்ளம்

இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள் : கிளிநொச்சியில் வடிந்தோடும் வெள்ளம்

எதிர்கால பாதுகாப்பிற்கான அரண்

அத்துடன் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்த போது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விசனம் வெளியிட்டப்பட்டுள்ளது. ஆகையினால் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரிதமாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கில் மாணவர்களின் மரணத்திற்கு காரணம் முப்படையினரின் பொறுப்பற்ற செயலாகும் : ரவூப் ஹக்கீம் | Irresponsible Acts Cause Student Deaths In Eastern

தொடர்ந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அவசர உதவிகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த பாதிப்புகளை நிவர்த்தி செய்து இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மாவடிப்பள்ளி பாலத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பொலீஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் நீரில் மூழ்கிய வயல்கள் : கவலையில் விவசாயிகள்

கிண்ணியாவில் நீரில் மூழ்கிய வயல்கள் : கவலையில் விவசாயிகள்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW