இஸ்ரேலுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் ஈரான்..!

Iran World Iran President Iran-Israel War
By Rakshana MA Jun 25, 2025 10:34 AM GMT

இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற 12 நாள் போரில் வெற்றி பெற்றதாக அறிவித்த ஈரான், அதன் தலைநகரான தெஹ்ரானில் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

பொதுமக்கள் ஈரானிய தேசியக் கொடியை ஏந்தி, இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்!

உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்!

வெற்றியைக் கொண்டாடும் ஈரான்

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

"இஸ்ரேல் தொடங்கிய போரை ஈரான் முடித்து வைத்தது," என ஆவேசமாக தெரிவித்த பொதுமக்கள், போர் நிறுத்தத்தால் ஈரானியர்கள் திருப்தியடைந்ததாக இல்லையெனவும், "தலைவர் கமேனி உத்தரவிட்டால், இஸ்ரேலை அழிக்க உயிர்த்தியாகம் செய்யத் தயார்" என்றும் தெரிவித்தனர்.

இந்த வெற்றிக்கொண்டாட்டம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்ற நிலைமை மேலும் கடுமையாகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனையில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் கைது

கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளர் தலைமையில் அறிமுக நிகழ்வு

கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளர் தலைமையில் அறிமுக நிகழ்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW