களுவாஞ்சிகுடியில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

Batticaloa Sri Lankan Peoples Women
By Rakshana MA Mar 08, 2025 10:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, கிழக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று(08) காலை மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நடைபெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு

மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு

சர்வதேச மகளிர் தினம் 

இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியிலும் சாதனை படைத்த ஆறு பெண்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் எந்த நிலையிலும் விடாமல் முன்னேற்றப்பாதையில் வாழ்க்கையை கொண்டு சென்ற பெண்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடியில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு | Intrernational Womnes Day Held Today At Batticaloa

அத்தோடு மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் அவர்களினால் சரியாக பயன்படுத்தபடுகின்றது? பயன்படுத்தப்படவில்லை என்னும் தலைப்பில் விசேட பட்டிமன்றமும் நடாத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் சிரேஸ் விரிவுரையாளர் றூபிவலன்ரினா பிரான்சிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பாடசாலையில் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் பணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

பாடசாலையில் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் பணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery