கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம்
கல்வி அமைச்சின் விசேட சுற்று நிருபத்திற்கு அமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது கடந்த (2024.11.22) அன்று பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிஷாத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழிகள் பிரிவுக்குப் பொறுப்பான முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம்.ஜலால்டீன் கலந்து சிறப்பித்தார்.
நூல்கள் அன்பளி
இதன்போது அரபு மொழியின் தொன்மை அதன் வளர்ச்சி பற்றிய விளக்கங்களும், அரபு மொழிப் பேச்சுக்களும், கசீதாக்களும் மற்றும் கவிதைகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகளும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.
இந்த நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டதோடு ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதனையடுத்து ,நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் எம்.எஸ்.எம்.ஜலால்டீனால் எழுதப்பட்ட ஒரு தொகுதி நூல்கள் பாடசாலை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |