இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது

CID - Sri Lanka Police Batticaloa Crime
By Farook Sihan Jul 30, 2025 08:04 AM GMT
Farook Sihan

Farook Sihan

இனிய பாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை அவரின் நான்கு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளைய வானிலை: வாட்டி வதைக்கப்போகும் வெயில்

நாளைய வானிலை: வாட்டி வதைக்கப்போகும் வெயில்

சோதனை நடவடிக்கையின் போது

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா என கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு நேற்று(29) குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்.

.அதனை தொடர்ந்து அந்த இடம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது | Iniya Bharathi Another Friend Arrested

கடந்த யுத்த காலத்தில் மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இயங்கிய காலகட்டத்தில் இம்மயானத்தில் ஆயுதங்கள் உட்பட கடத்தப்பட்ட பலரும் சுடப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவற்றை உண்மைப்படுத்தும் விதமாக இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தம்பிலுவில் இந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது கருணா குழுவின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் இனியபாரதியின் கைதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்த கல்முனை அலுவலக பொறுப்பாளராக இருந்தவராக அறியப்படுகின்ற நபர் அழைத்துவரப்பட்டு குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி

காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி