நாளைய வானிலை: வாட்டி வதைக்கப்போகும் வெயில்
Sri Lankan Peoples
Weather
By Sumithiran
பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (30) கவனம் செலுத்த வேண்டிய அளவில் தொடரும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளைக்கும் செல்லுபடியாகும் என்று வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது..
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய அளவில் தொடரக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே அதிக வெயிலுக்குள் மக்கள் செல்வதை தவிர்க்கவும் இந்த காலத்தில் அதிக தண்ணீரை அருந்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.