பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Law and Order Deshabandu Tennakoon
By Laksi Jul 26, 2024 07:42 AM GMT
Laksi

Laksi

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் சட்டபூர்வமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் குறித்து இன்று (26) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்

பொலிஸ் மா அதிபர் நியமனம்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபாநாயகர், நாம் எந்தவொரு தவறான தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அரசியலமைப்பிற்கமைய நியாயமான, சரியான தீர்மானத்தை ஆழமாக சிந்தித்துதான் எடுத்துள்ளோம்.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு | Information Released Speaker Appointment Igp

ஏனையோருக்கு அந்த தீர்மானம் தவறாகத் தோன்றலாம். ஆனால் நாம் மனச்சாட்சிக்கமைய சரியான முறையிலேயே அந்த தீர்மானத்தை எடுத்தோம்.

எனவே,  தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது எனவும் நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அறிமுகமாகும் ஒன்லைன் விசா முறை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் அறிமுகமாகும் ஒன்லைன் விசா முறை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பொலிஸ் மா அதிபர் நியமன விவகாரம் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் நியமன விவகாரம் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW