இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Nov 11, 2024 03:52 PM GMT
Laksi

Laksi

இலங்கையின் கடன் டிசம்பர் மாதத்திற்குள் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இப்போது அது முழுவதுமாக முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சத் தொகை மீதி இருக்கிறது.

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

கடன் மறுசீரமைப்பு

2028 இல் கடனை செலுத்தத் தொடங்குவோம். 2028இல் செலுத்த வேண்டிய கடனை கணக்கிட்டுள்ளோம். அந்தக் கடனை அடைக்கக் கூடிய பொருளாதாரத்தை அரசால் உருவாக்க முடியும்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Information Released On Debt Restructuring

பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு IMF குழு இலங்கை வருகிறது. அதன்பின் 3வது பரிசீலனையை முடித்து, அந்த பணியை ஜனவரி இறுதிக்குள், பிப்ரவரி மாத ஆரம்பத்தில் முடிப்போம். அப்போதுதான் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையை அடைய முடியும்."என்றார்.

பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச் சந்தை நேரத்தில் மாற்றம்

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச் சந்தை நேரத்தில் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW