அமைச்சர்களுக்கான அரச பங்களாக்கள் குறித்து வெளியான தகவல்
காலணித்துவ ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பங்களாக்கள் எதிர்வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான 31 அரசாங்க பங்களாக்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு அரசாங்க அமைச்சர்களின் அதிகார பூர்வ இல்லங்களாக இவை இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் எதிர்காலத்தில் இந்த பங்களாக்கள் பொருத்தமான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது நிர்வாக அமைச்சிடம் ஒப்படைப்பு
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் 28 பங்களாக்கள் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை வரையில் இவற்றில் 22 பங்களாக்கள் பொது நிர்வாக அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாக்கள் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவற்றின் தளபாடங்கள் மற்றும் பொருட்கள் என்பனவற்றை கணக்கீடு செய்வதற்கு சில காலம் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
காலணித்த அதிகாரிகளின் வாசஸ்தலங்கள்
இந்த பங்களாக்களின் நீர் மின்சார கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பங்களாக்களை எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்த முடியும் என்பது குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பங்களாக்கள் காலணித்துவ ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் அதிக அளவில் நிர்மாணிக்கப்பட்டவை எனவும் அவை காலணித்த அதிகாரிகளின் வாசஸ்தலங்களாக பயன்படுத்தப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் இந்த பங்களாக்கள் பெருமளவு பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |