அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு : வெளியான தகவல்
Sri Lanka
Lanka Sathosa
Economy of Sri Lanka
By Laksi
நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
குறித்த விலை குறைப்பானது இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 799 ரூபாவாகும்.
புதிய விலை
அத்தோடு, வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராமின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 880 ரூபாவாகும்.
வெள்ளை சீனியின் ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய 243 ரூபாவாகும்.
மேலும், அனைத்து சதொச பல்பொருள் அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |