வினேஷ் போகத் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு
பரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.
பரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோகிராம் எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
விசாரணை
இந்த மனு தொடர்பான வழக்கனது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எனினும், வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிராக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.
அடிப்படை விதிமுறைப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மனுவில் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |