3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற பெற்றோர்

India Crime England
By Faarika Faizal Oct 04, 2025 03:47 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இங்கிலாந்தில் இந்திய தம்பதி தங்கள் 3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் பென்னைன் வே என்ற இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான மன்பிரீத் ஜாதனா (வயது 34) மற்றும் ஜஸ்கிரெத் சிங் உப்பல் (வயது 36) வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய 3 வயது மகளான பெனலோப் சந்திரீ 2023-ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி மாலையில் வீட்டில் உயிரிழந்துள்ளது.

மாணவியின் புகைப்படத்தை தவறான முறையில் பரப்பிய இளைஞர் கைது

மாணவியின் புகைப்படத்தை தவறான முறையில் பரப்பிய இளைஞர் கைது

பல மாதங்களாக பட்டினி 

தகவல் அறிந்து சென்ற பொலிஸார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற பெற்றோர் | Indian Couple Starves 3 Year Child Death England

தொடர் விசாரணையில், பல மாதங்களாக பெனலோப்பை பெற்றோர் பட்டினியாக போட்டது தெரிய வந்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவில், ஜாதனா மற்றும் உப்பல் தம்பதியை போலீசார் கைது செய்து கடந்த மாதம் குற்றச்சாட்டு அறிக்கையையும் பதிவு செய்தனர்.

3 வயது மகளை அவர்கள் பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளதுடன் அடுத்த கட்ட விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது.  

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு பயணம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு பயணம்

இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது போதும் ஒரு கப்பல் காசாவுக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது போதும் ஒரு கப்பல் காசாவுக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது.