பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யும் நாடு: ஐ.நாவில் இந்தியா கண்டனம்
பாகிஸ்தான் இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் சாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விவாதம் நடந்த நிலையில் குறித்த விவாதத்தில் பங்கேற்ற ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.
பொய் பிரசாரம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் ஐ.நாவில் உரையாற்றிய அவர், “ஒவ்வொரு ஆண்டும், துரதிஷ்டவசமாக, தனது நாட்டிற்கு எதிராக பாகிஸ்தானின் மாயையான கூச்சலைக் கேட்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
குறிப்பாக காஷ்மீர் தொடர்பில் பொய் பிரசாரம் செய்கின்றனர். இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்துள்ளோம்.
தனது சொந்த மக்களை குண்டுவீசி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் பாகிஸ்தான், தவறான பொய் பிரசாரம் மூலம் உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சிக்க முடியும்.
1971 ஆம் ஆண்டில் தனது சொந்த இராணுவத்தால் 4 இலட்சம் பெண்களை இனப்படுகொலை செய்யும் திட்டமிட்ட பிரசாரத்தை அங்கீகரித்த நாடு. உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |