அமெரிக்காவின் முட்டாள்தனத்தை எதிர்கொள்ள தயார்..! மீண்டும் போர் அபாயம் - ஈரானின் கடும் எச்சரிக்கை
ஈரானிய இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் மூத்த அதிகாரி, "ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று தெரிவித்துள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் பேச்சுவார்த்தை முன்மொழிவுகளில் தமக்குத் திருப்தியில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக சனிக்கிழமையன்று அந்த மூத்த இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்க அதிகாரிகளின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் "தாங்கள் உருவாக்கிய சிக்கலில் இருந்து தப்பிப்பதையே" நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்க அதிகாரிகளின் செயல்களும் அறிக்கைகளும் முதன்மையாக ஊடகங்களை மையமாகக் கொண்டவை.
அவை முதலாவதாக, எண்ணெய் விலை குறைவதைத் தடுப்பதையும், இரண்டாவதாக, தாங்கள் உருவாக்கிய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டவை" என்று குறிப்பிட்டுள்ளார்.