உடன் வெளியேறவும்..! ஈரானின் புரட்சிகர காவற்படை விடுத்துள்ள எச்சரிக்கை

Iran Middle East World
By Sajithra May 04, 2026 02:14 AM GMT

பாரசீக வளைகுடாவிலிருந்து கப்பல்களை வெளியேறுமாறு ஐ.ஆர்.ஜி.சி உத்தரவிட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது கப்பல்கள் பெருமளவில் வெளியேறி வருவதால், அவை துபாயை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், பல கப்பல்களுக்கு அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தெரிவித்துள்ளது.