விலைத் திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Benat
லிட்ரோ எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் விலைகளிலேயே மே மாதமும் லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
விற்பனை செய்யப்படும் விலை
இதன்படி, 12.5kg எடையுள்ள எரிவாயு கொள்கலன் ஒன்று 4,765 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
மேலும், 5kg எடையுள்ள எரிவாயு கொள்கலன் ஒன்று 1,910 ரூபாவாகவும், 2.3kg எடையுள்ள எரிவாயு கொள்கலன் ஒன்று 890 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
