ஹோர்முஸில் 45 கப்பல்களை கைப்பற்றியுள்ள அமெரிக்க மத்திய கட்டளை

Donald Trump United States of America Iran Strait of Hormuz
By Sajithra May 02, 2026 01:41 AM GMT

ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையினால் 45 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (US CENTCOM) தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான போருக்குப் பொறுப்பான அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை மீற முயன்ற 45 கப்பல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

"அமெரிக்கப் படைகள் தொடர்ந்து சர்வதேச கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தற்போது வரை, 45 வர்த்தகக் கப்பல்கள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, திரும்பிச் செல்லுமாறு அல்லது துறைமுகத்திற்கே திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன," என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான இந்த முற்றுகையை அமெரிக்கா கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி நடைமுறைபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.