ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்கள்.. ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானம்

Donald Trump Iran Middle East Strait of Hormuz
By Sajithra May 04, 2026 01:58 AM GMT

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை அமெரிக்கா வழிநடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி, திங்கட்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சிக்கியுள்ள கப்பல்கள் வெளியேற அமெரிக்கா உதவும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக ஊடகப் பதிவில், 

"ஈரான், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நீர்வழிகளில் இருந்து அந்தந்த நாடுகளின் கப்பல்களை நாங்கள் பாதுகாப்பாக வழிநடத்தி வெளியேற்றுவோம் என்று தெரிவித்துள்ளோம்.

இதன் மூலம் அவர்கள் தங்களது வணிக நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர முடியும்." எந்தெந்த நாடுகளின் கப்பல்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

"புராஜெக்ட் ஃப்ரீடம்" (Project Freedom) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயல்பாட்டில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், அவை "கடுமையாக எதிர்கொள்ளப்படும்" என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.