துருக்கியின் இராணுவ விமானங்கள் பாகிஸ்தானில்....வெளியான தகவல்

Narendra Modi Pakistan India Turkey Jammu And Kashmir
By Rakshana MA Apr 29, 2025 05:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

துருக்கி இராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ஒன்றினை வெளியிட்டன.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவலின் உண்மை நிலை குறித்து துருக்கி ஜனாதிபதி மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இவ்வாறு சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு வருகை

இராணுவ விமானங்கள்

காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களை பெற்றதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையிலேயே, துருக்கியிலிருந்து இராணுவ விமானங்கள் தரையிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

துருக்கியின் இராணுவ விமானங்கள் பாகிஸ்தானில்....வெளியான தகவல் | India Pakistan War Updates

இருப்பினும், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள துருக்கி, துருக்கியிலிருந்து வந்த ஒரு சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பாகிஸ்தானில் தரையிறங்கியதாகவும், பின்னர் அது அதன் பாதையில் தொடர்ந்தது பயணப்பட்டதாகவும் உறுதி செய்துள்ளது.

அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அறிக்கைகளுக்கு அப்பால் வெளியிடப்படும் ஊகச் செய்திகளை நம்ப கூடாது என்றும் துருக்கி ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தல் குறித்து தலைமையகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

தேர்தல் குறித்து தலைமையகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

காஷ்மீர் தாக்குதல்

கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை துருக்கி கண்டித்துள்ளதுடன் இந்த தாக்குதலால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

துருக்கியின் இராணுவ விமானங்கள் பாகிஸ்தானில்....வெளியான தகவல் | India Pakistan War Updates

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடுமையான பிராந்திய தகராறின் மையமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

எனவே, பஹல்காம் தாக்குதல் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைய செய்துவிட்டன, இது சாத்தியமான இராணுவ நடவடிக்கை குறித்த கவலையைத் தூண்டியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.  

தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றும்

தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றும்

டெங்குவினால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்குவினால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW