டெங்குவினால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Ratnapura
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
Hospitals in Sri Lanka
By Rakshana MA
இரத்தினபுரி (Ratnapura) மருத்துமனையில் சுகாதார ஊழியர்கள் 166 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதிக்குள் இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் 1465 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய்
டெங்கு நோயாளிகள் காணப்படும் மாவட்டங்கள் இலங்கையில் கூடுதலான டெங்கு நோயாளிகள் காணப்படும் மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இலங்கை முழுவதும் 14 ஆயிரத்து 600 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |