இந்தியா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாக்கிஸ்தான்

Pakistan India World
By Rakshana MA May 10, 2025 06:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்தியா மீது பாகிஸ்தான் பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

இதற்கமைய, தமது இராணுவ தளங்களை இலக்குவைத்து இந்தியா ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று(10) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தலைநகர் இஸ்லாமபாத் உள்ளிட்ட 2 பகுதிகளிலுள்ள இராணுவத் தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பாகிஸ்தான் இராணுவத்தினரால் குறித்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட பாதாள உலக தொடர்பாளர்கள்! வெளியான பின்புலம்

தேர்தலில் போட்டியிட்ட பாதாள உலக தொடர்பாளர்கள்! வெளியான பின்புலம்

போர் தாக்குதல்கள் 

பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஒபரேஷன் சிந்தூர் தாக்குதலையடுத்து 2 நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாக்கிஸ்தான் | India Pakistan War Update Today

இந்தியத் தாக்குதல்களில் இதுவரை 36 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களால் இதுவரை 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள 32 விமான நிலையங்கள் எதிர்வரும் மே 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதுமுள்ள 32 விமான நிலையங்களிலுள்ள அனைத்து சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

காரைதீவு பிரதேச சபைக்கு மீண்டும் தெரிவாகும் தலைமைகள்..!

காரைதீவு பிரதேச சபைக்கு மீண்டும் தெரிவாகும் தலைமைகள்..!

வாழைச்சேனையில் பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

வாழைச்சேனையில் பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW