வாழைச்சேனையில் பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் பெண்ணொருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(08) இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய குறித்த அதிகாரி இன்று(08) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பொலிஸ் அதிகாரி தான் திருமணம் முடிக்க இருந்த பெண்ணுடனான வாய்த்தர்க்கத்தின் விளைவால் இவ்வாறு அடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அதேவேளை, இந்த பொலிஸ் அதிகாரி ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் எனவும், அவர் காதலித்த பெண் வாழைச்சேனையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடமையிலிருந்து லீவில் வீடு சென்ற குறித்த பொலிஸ் அதிகாரி சம்பவதினமான நேற்று திருமணம் முடிக்க இருந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்தும் இதில் காயமடைந்த பெண் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தாக்கப்பட்ட பெண்ணால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து இன்று வாழைச்சேனையில் அந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |