பாகிஸ்தானுக்கு பில்லியன் டொலர் கடன் வழங்கிய சர்வதேச அமைப்பு
மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் நேற்று (09) வோசிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று தமது எதிர்ப்பை இந்தியா முறைப்படி தெரிவித்திருந்தது.
இந்தியாவின் எதிர்ப்பு
எனினும் இந்தியாவின் எதிர்ப்பை புறக்கணித்து சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு கடனை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 1 பில்லியன் டொலர் கடனை பாகிஸ்தான் கோரியிருந்தது.
இந்தநிலையில் வழங்கப்படும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.
சர்வதேச நாணய நிதியம்
இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதற்காக பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் செரீப் சர்வதேச நாணய நிதியத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |