இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம்

Sri Lanka India Ship
By Rakshana MA Oct 23, 2024 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத் துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவைக்காக இந்திய அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்குகிறது என இந்ஸ்ரீ பெர்ரி சேர்விஸ் தனியார் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

கப்பல் சேவையினை மிகவும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதற்காகவே குறித்த நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

வழமைக்கு வரும் படகுச்சேவை

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இலங்கை - இந்தியாவிற்கு சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விசாவினை பெற்றுக்கொள்வதோடு கப்பலுக்கான டிக்கெட்டுக்களை இணையம் மூலம் பதிவு செய்யலாம்.

இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம் | India Invests 25 Millions In Srilanka Shipping

தற்போது கப்பல் சேவையானது சீராக இயங்குகின்றது வாரத்தில் நான்கு நாட்கள் முழு கொள்ளளவுடன் இயங்கும். மேலும், இலங்கை அரசாங்கம் கப்பல் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் புறப்பாடு வரியை குறைத்துள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவினை மேம்படுத்த முன்னெடுக்கப்படும் சேவைகளும், திட்டங்களும் வரவேற்கத்தக்கவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டும் திட்டம் முன்னெடுப்பு

தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டும் திட்டம் முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW