அதிகரித்து வரும் சுவாச ரீதியிலான பிரச்சினைகள்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Hospitals in Sri Lanka Disease
By Rakshana MA Feb 15, 2025 09:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க(Neranjan Dissanayake) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவித்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவித்தல்

சுவாச ரீதியிலான பிரச்சினை

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களினூடாக அவர்களின் வீட்டில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் இந்த நிலை பரவக்கூடும்.

அதிகரித்து வரும் சுவாச ரீதியிலான பிரச்சினைகள்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Increasing Respiratory Problem Doctors Alert In Sl

அதுமட்டுமல்லாமல், வீடுகளில் இருக்கும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோர், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்போதைய காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW