உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Local government Election Prof. Chandana Abeyratne
By Rakshana MA Feb 15, 2025 08:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன(Chandana Abeyratne) தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக அமைச்சில் நேற்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டது.

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் சட்டமூலம் 

இந்த நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் நடத்தப்படும். இந்த விவாதத்திற்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க முடியும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவித்தல் | Date For The Local Council Elections Sri Lanka

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக, முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான திருத்தத்திற்கும், அந்த வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை மீள ஒப்படைக்கும் திருத்தத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என குறிப்பிட்டுள்ளார். 

சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

வடக்கு மற்றும் கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

வடக்கு மற்றும் கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW